/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரதி ஆங்கில உயர்நிலை பள்ளி 36ம் ஆண்டு நிறைவு விழா
/
பாரதி ஆங்கில உயர்நிலை பள்ளி 36ம் ஆண்டு நிறைவு விழா
பாரதி ஆங்கில உயர்நிலை பள்ளி 36ம் ஆண்டு நிறைவு விழா
பாரதி ஆங்கில உயர்நிலை பள்ளி 36ம் ஆண்டு நிறைவு விழா
ADDED : பிப் 18, 2025 06:41 AM

திருக்கனுார்: சோரப்பட்டு பாரதி ஆங்கில உயர்நிலை பள்ளியில் 36ம் ஆண்டு நிறைவு மற்றும் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது.
பள்ளி நிர்வாகி டாக்டர் சம்பத் வரவேற்றார். நிர்வாக இயக்குனர்கள் ஹரிஷ்குமார், மோகன்குமார் முன்னிலை வகித்தனர். விழாவில், திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ., அங்காளன், கவிஞர் கோவிந்தராசு ஆகியோர் பங்கேற்று, கடந்தாண்டு 10ம் வகுப்பு பொது தேர்வில், முதல் மூன்று இடங்களை பிடித்த மற்றும் பாடவாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசும், சுழற்கேடயம் மற்றும் வெள்ளி காசுகள் வழங்கினர்.
இதில், புதுச்சேரி சுயநிதி தனியார் பள்ளி சங்க கூட்டமைப்பு தலைவர் ரங்கநாதன், செயலாளர் சிவராஜன், பொருளாளர் சிவசுப்ரமணியன்,தனியார் பள்ளி நிர்வாகிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, ஆசிரியர் மோகன்ராஜ், சோரப்பட்டு நலவழி மைய மருத்துவ அதிகாரி குணசீலன், உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமரன் ஆகியோர் பங்கேற்று, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.தொடர்ந்து 7வது முறையாக சிறந்த பள்ளிக்கான முதல்வர் விருது பெற்றதற்காக,பள்ளியின் நிர்வாகிசம்பத், தலைமை ஆசிரியைசுசீலா சம்பத் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் சுசீலா சம்பத் நன்றி கூறினார்.

