புதுச்சேரியின் பிராந்திய மொழிகளை பாதுகாக்க பாரதி பவுண்டேஷன் ஜனாதிபதிக்கு மனு
புதுச்சேரியின் பிராந்திய மொழிகளை பாதுகாக்க பாரதி பவுண்டேஷன் ஜனாதிபதிக்கு மனு
ADDED : மே 30, 2026 05:48 AM
புதுச்சேரி: புதுச்சேரியின் பாரம்பரியமிக்க நான்கு மொழிகளும், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் தொடர்ந்து நீடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என, பாரதி பவுண்டேஷன் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து பவுண்டேஷன் தலைவர் ராஜகோபால் சுவாமி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தேசிய கல்விக்கொள்கை கீழ் கொண்டுவரப்படும் பாடத்திட்ட மாற்றங்களால், புதுச்சேரியின் தனித்துவமான 350 ஆண்டுகால பன்மொழி மற்றும் கலாசார அடையாளத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பாடத்திட்ட கட்டமைப்பில் இருந்து பிரெஞ்சு மொழி நீக்கப்பட்டால், ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலமும், ஆசிரியர்களின் வாழ்வாதாரமும் கேள்விகுறியாகும்.
இது, புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்தபோது பிரெஞ்சு அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று ஒப்பந்தங்களை மீறுவதாக அமையும். சர்வதேச அளவில் இந்தியாவுக்கு இருக்கும் துாதரக மற்றும் கலாசாரப் பாலம் பலவீனமடையும்.
புதுச்சேரி மாநிலத்திற்கான சி.பி.எஸ்.இ., மொழிப் பாடத்திட்டத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் பிரெஞ்சு ஆகிய நான்கு மொழிகளும் தொடர்ந்து நீடிப்பதை மத்திய கல்வி அமைச்சகமும் உறுதி செய்ய வேண்டும். பிரெஞ்சு மொழியின் வரலாற்று முக்கியத்துவத்தை அங்கீகரித்து, அதை ஒரு முக்கியப் பாடமாகத் தொட ர அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
