/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரதியார் பல்கலைக்கூடத்தில் வரைவு மெரிட் லிஸ்ட் வெளியீடு
/
பாரதியார் பல்கலைக்கூடத்தில் வரைவு மெரிட் லிஸ்ட் வெளியீடு
பாரதியார் பல்கலைக்கூடத்தில் வரைவு மெரிட் லிஸ்ட் வெளியீடு
பாரதியார் பல்கலைக்கூடத்தில் வரைவு மெரிட் லிஸ்ட் வெளியீடு
ADDED : ஜூலை 26, 2025 08:13 AM
புதுச்சேரி : பாரதியார் பல்கலைக்கூடத்தில் வரைவு மெரிட் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலைக்கூடத்தில் பி.எப்.ஏ., பி.பி.ஏ., இசை, பி.பி.ஏ., நடனம் உள்ளிட்ட நுண்கலை படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு சென்டாக் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
தொடர்ந்து, கடந்த 18 ம் தேதி இப்படிப்புகளுக்கு மெரிட் லிஸ்ட் வெளியிடப்பட்டது. 22ம் தேதி வரை ஆட்சேபனைகள் வரவேற்கப்பட்டன. தற்போது அனைத்து பரிசீலனைகள் முடிந்து வரைவு மெரிட் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது.
பி.எப்.ஏ., படிப்பில் நுழைவு தேர்வில் 60 சதவீத மதிப்பெண், பிளஸ் 2 மதிப்பெண் 40 சதவீதம் என்ற அடிப்படையில் மெரிட் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது. பி.பி.ஏ., இசை, பி.பி.ஏ., நடனம் நுண்கலை படிப்பிற்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மெரிட் லிஸ்ட் வெளியிடப்பட உள்ளது.
மாணவர்கள் தங்களுடைய விண்ணப்பம் குறித்த நிலையை டேஷ்போர்டு வாயிலாக நுழைந்து தெரிந்து கொள்ளலாம். புதுப்பிக்கப்பட்ட குடியிருப்பு, சிறப்பு இட ஒதுக்கீடு உள்ளிட்ட சான்றிதழ்களை தங்களுடைய வரும் 28 ம் தேதி மாலை 5 மணிக்குள் அப்டேட் செய்யலாம் என சென்டாக் அறிவித்துள்ளது.

