பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் ஓவியக் கண்காட்சி
பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் ஓவியக் கண்காட்சி
ADDED : ஏப் 23, 2026 06:46 PM

புதுச்சேரி: புதுச்சேரி கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் புதுச்சேரி வளர்கலைக் கூடத்தில் பாரதியார் பல்கலைக் கூடத்தை சேர்ந்த மாணவர்களின் ஓவியக் கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது.
அரியங்குப்பத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கூடத்தைச் சேர்ந்த ஓவியர்களை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 10-ஆம் தேதி செயின்ட் லுாயி வீதியில் அமைந்துள்ள வளர்கலைக் கூடத்தில் ஓவியக் கண்காட்சி துவங்கியது.
கண்காட்சியை பாரதியார் பல்கலைக்கூட ஓவியத் துறைத் தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கித் துவக்கி வைத்தார். இதில் ஓவியர்கள் தனசேகர், எழிலரசன், செந்தில் பாபு, ஸ்ரீதர் மற்றும் ராஜா முருகன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களின் கலைத்திறனைப் பாராட்டினர். இரண்டு வாரங்கள் நடந்த கண்காட்சி நேற்று நிறைவடைந்தது. கண்காட்சியை சுற்றுலாப் பயணிகள் மற்றும் கலை ஆர்வலர்கள் என ஏராளமானோர் நேரில் கண்டு ரசித்தனர்.
இந்தக் கண்காட்சியில் பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் திருவணன், ரூபன், தேவா, குமரன், கீர்த்திவாசன் ஆகியோர் வரைந்த 73 ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இயற்கைக் காட்சிகள், மனித உணர்வுகள் மற்றும் சமகாலப் பிரச்சனைகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்த இந்த ஓவியங்களில், 10 படங்கள் கலை ஆர்வலர்களால் விலைக்கு வாங்கப்பட்டன. இதன் மூலம் ரூ.35,000 மதிப்பிலான ஓவியங்கள் விற்பனையாகி மாணவர்களுக்குப் பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது.
