/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு சார்பில் பாரதிதாசன் நினைவு நாள் அனுசரிப்பு
/
அரசு சார்பில் பாரதிதாசன் நினைவு நாள் அனுசரிப்பு
ADDED : ஏப் 22, 2025 04:35 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில் பாரதிதாசன் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், திருமுருகன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், பாஸ்கர், லட்சுமிகாந்தன், பாரதிதாசன் அறக்கட்டளை தலைவர் பாரதி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர், கலை பண்பாட்டு துறை சார்பில் பெருமாள் கோவில் வீதியில் அமைந்துள்ள பாரதிதாசன் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.