ADDED : செப் 11, 2026 07:32 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பாரதியார் நினைவு நாள் நேற்று அரசு சார்பில், அனுசரிக்கப்பட்டது.
பாரதி பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில், பாரதியார் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் ராஜவேலு, சிவக்கொழுந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், அரசு கொறாட ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் சாய்சரவணன்குமார், நாராயணசாமி, அழகானந்தம், விக்னேஷ் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்திய கம்யூ., சார்பில் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., நாரா கலைநாதன், நிர்வாகிகள் தினேஷ் பொன்னையா, சிவக்குமார், சுப்பையா, அந்தோணிராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
