தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு உயர்நிலைப்பள்ளியில் பாரதியார் பிறந்த நாள்

அரசு உயர்நிலைப்பள்ளியில் பாரதியார் பிறந்த நாள்

அரசு உயர்நிலைப்பள்ளியில் பாரதியார் பிறந்த நாள்


ADDED : டிச 12, 2024 06:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 12, 2024 06:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கணுவாப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் பாரதிய பாஷா உத்சவ் சார்பில், பாரதியார் பிறந்த நாள் விழா நடந்தது.

ஆசிரியர் தணிகாசலம் வரவேற்றார். தலைமை ஆசிரியர் திருவரசன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் புனிதவதி நிர்மலா, ஜெயக்குமார் ஆகியோர் பாரதியின் கனவுகள், உரைநடைகள், சுதந்திர வேட்கை, சமூக சீர்திருத்த கருத்துக்கள் குறித்தும் பேசினர்.

மாணவர்களுக்கு பாரதியார் குறித்த வினாடி வினா, பாட்டு, கவிதை வாசித்தல், நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.

ஆசிரியர்கள் ரோவியர் பெரோஷா, இளஞ்செழியன், பத்மாவதி, திருமங்கை, சத்தியா, சரவணன், சுபத்ராதேவி, பவானி, புவனராஜா, சரண்யா, ரவி, சத்தியவாணி, சுமதி, யாமினி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us