/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருக்கனுார் பள்ளியில் பாரதியார் பிறந்த நாள்
/
திருக்கனுார் பள்ளியில் பாரதியார் பிறந்த நாள்
ADDED : டிச 12, 2025 05:39 AM

திருக்கனுார்: திருக்கனுார் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி துணை முதல்வர் சுசிலா சம்பத் வரவேற்றார். நிர்வாக இயக்குநர் ஹரிஷ்குமார் முன்னிலை வகித்தார். பள்ளியின் நிர்வாகி சம்பத் தலைமை தாங்கி, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதியாரின் படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார்.
பள்ளி அளவில் நடத்தப்பட்ட நாடகம், நடனம், பேச்சு, கட்டுரை, கவிதை மற்றும் ஓவியம் போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவை யொட்டி, மாணவ, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
ஏற்பாடுகளை ஆசிரியர்கள், சாரண, சாரணிய மாணவர்கள், தேசிய மாணவர்கள் படை மற்றும் சமுதாய நலப்பணித்திட்ட மாணவர்கள் செய்திருந்தனர். பள்ளியின் நிர்வாக இயக்கு நர் மோகன்குமார் நன்றி கூறி னார். மாணவிகள் ரிஷ்மியா, முஷினாபானு, ஜீவனா தொகுத்து வழங்கினர்.

