/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரதியார் பிறந்தநாள் கவியரங்கம்
/
பாரதியார் பிறந்தநாள் கவியரங்கம்
ADDED : டிச 25, 2024 07:58 AM

புதுச்சேரி : புதுச்சேரி கலை, பண்பாட்டுத்துறை, தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் சார்பில், சுப்ரமணிய பாரதியார் பிறந்தநாள் விழா கவியரங்கம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். கலைமாமணி பாரதி முன்னிலை வகித்தார். இதில், பாருக்குள்ளே நல்ல நாடு தலைப்பில் கவிஞர் கலாவிசு தலைமையில் பாவலர்கள் கயல்விழி, வினோத், பவானி அய்யனார், பிரபா, ரேவதி ஆகியோர் பங்கேற்ற கவியரங்கம் நடந்தது.
காஞ்சி மாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் கார்த்திகேயன் சிறப்புரை ஆற்றினார்.
'புதுவையில் பாரதி' என்ற தலைப்பில் கலைமாமணி பாரதி தலைமையில் பாவலர்கள் சுதர்சனம், கஸ்துாரி, சரசுவதி வைத்தியநாதன், புவனேஸ்வரி, ஈஸ்வரிதேவி, யுகபாரதி, சுபாஷினி, சரவணன் பங்கேற்ற உரையரங்கம் நடந்தது. முன்னதாக, காமராஜ் கலைக்குழுவினரின் வாய்ப்பாட்டு, கலைமாமணி சகாதேவன் கலைக்குழுவினரின் வில்லுப்பாட்டு நடந்தது.