/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரதியார் கிராம வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்த போராட்டம்
/
பாரதியார் கிராம வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்த போராட்டம்
பாரதியார் கிராம வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்த போராட்டம்
பாரதியார் கிராம வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்த போராட்டம்
ADDED : பிப் 22, 2024 06:49 AM
புதுச்சேரி : புதுவை பாரதியார் கிராம வங்கி ஊழியர்கள் நாளை நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.
கிராம வங்கிகளை தனியார் மயமாக்குதலை கண்டித்தும், தேசிய கிராம வங்கி உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய கிராம வங்கி ஊழியர் சங்கம், நாளை 23ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் 38 கிராம வங்கிகள் இயங்கி வருகிறது. அகில இந்திய கிராம வங்கி ஊழியர் சங்கத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, புதுச்சேரியில் இயங்கி வரும் கிராம வங்கியான புதுவை பாரதியார் கிராம வங்கி ஊழியர் மற்றும் அலுவலர் சங்கங்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கிறது.
இதனால், நாளை 23ம் தேதி புதுச்சேரியில் உள்ள பாரதியார் கிராம வங்கிகள் இயங்காது.