/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் போராட்டம் வாபஸ்
/
பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் போராட்டம் வாபஸ்
ADDED : செப் 28, 2024 04:10 AM
அரியாங்குப்பம், : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதியார் பல்கலைக் கூடத்தில் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்திய, மாணவர்களிடம் இயக்குனர் பேசியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
அரியாங்குப்பம் பாரதியார் பல்கலை கூட இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் நுண்கலைத்துறை மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கடந்த இரண்டு நாட்களாக கல்லுாரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
போராட்டத்தில், கல்லுாரி நிர்வாகம் நுண்கலைத்துறையின் தனித்தன்மையை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை கைவிட வேண்டும். தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நுண்கலைத் துறையை இணைக்க வேண்டும். நுண்கலைத்துறைக்கு தனியாக முதல்வர் நியமிக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், போராட்டம் நடத்திய மாணவர்களை கலைப் பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள் சந்தித்து, உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறினார். அதனை அடுத்து, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, நேற்று வகுப்புக்கு திரும்பினர்.