/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை, வாய்க்கால் பணிகளுக்கு பூமி பூஜை
/
சாலை, வாய்க்கால் பணிகளுக்கு பூமி பூஜை
ADDED : பிப் 13, 2024 05:00 AM

புதுச்சேரி: சிமென்ட் சாலை அமைப்பது, வாய்க்கால் கட்டுவது ஆகிய பணிகளை, அசோக்பாபு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
முதலியார்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட நைனார்மண்டபம் திவான் கந்தப்பா நகர் சின்னசந்து சாலையை சிமென்ட் சாலையாக மாற்றுவதற்கும், வேல்ராம்பட்டு திருப்பூர் குமரன் நகர் முதல் பிரதான சாலையில் 'ப' வடிவ வாய்க்கால் கட்டுவதற்கும், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.8 லட்சத்தை அசோக்பாபு எம்.எல்.ஏ., ஒதுக்கி தந்தார்.
இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. பூமி பூஜையில் பங்கேற்று பணிகளை, அசோக்பாபு துவக்கி வைத்தார். பா.ஜ., நகர மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி, தொகுதி தலைவர் விஜயகுமார், கனகராஜ், பிரவீன், அய்யப்பன், கணேசன், அன்புக்கரசி, கோமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.