ADDED : ஆக 20, 2025 06:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார் : வில்லியனுார் பிருந்தாவனம் நகரில் சாலை அமைக்கும் பணியை சிவா எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
வில்லியனுார் பைபாசை ஒட்டி உள்ள பிருந்தாவனம் நகர் விரிவாக்க பகுதியில் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், சாலை அமைக்க எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 14:16 லட்சம் ஒதுக்கப்பட்டது.
இப்பணியை சிவா எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், வில்லியனுார் கொம்யூன் இளநிலைப் பொறியாளர் சத்தியநாராயணா, பிருந்தாவனம் நகர் முக்கியஸ்தர்கள் ஜெய்சங்கர், ரவி, சிவாஜிராவ், கலியபெருமாள், ஏழுமலை, பழனிசாமி, சரவணன், சதீஷ், ரகு, மாசிலாமணி, ராஜசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.