தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தகன கொட்டகை புனரமைக்க வரும் 29ம் தேதி பூமி பூஜை

தகன கொட்டகை புனரமைக்க வரும் 29ம் தேதி பூமி பூஜை

தகன கொட்டகை புனரமைக்க வரும் 29ம் தேதி பூமி பூஜை


ADDED : ஏப் 27, 2025 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2025 04:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : கருவடிக்குப்பம் மயானத்தில் பிராமண சமுதாயத்தினருக்கான தகனக் கொட்டகையை புனரமைப்பதற்கான பூமி பூஜை நாளை மறுநாள் 29ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து வேதபாரதி பொதுச் செயலாளர் நடராஜன் விடுத்துள்ள அறிக்கை:

பாரத பண்பாட்டு அமைப்பான வேதபாரதி, புதுச்சேரியில் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறது. அதன் ஒருபகுதி யாக, கருவடிக்குப்பம் மயானத்தில் உள்ள நுாற்றாண்டை நெருங்க வுள்ள, பிராமணர் சமுதாயத்திற்கான தகனக் கொட்டகை சிதிலமைடந்துள்ளது. இதனை சமூக மக்களின் பொருளுதவியுடன் புனரமைக்கப்பட உள்ளது.

இதற்கான செயல்திட்டங்கள் தயாரான நிலையில், கட்டுமான பணி துவங்குவதற்கான பூமி பூஜை வரும் 29ம் தேதி காலை 7:30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் சமூதாய மக்கள் பங்கேற்று, திட்டப்பணி சிறப்பாக நடைபெற பிரார்த்தனை செய்து கொள்ளவும்.

இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us