ADDED : செப் 28, 2024 05:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி பேரூராட்சி கூட்டம் நேற்று நடந்தது.
பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு சேர்மன் கந்தன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் லலிதாமணி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் வெற்றியரசு வரவேற்று, மன்றப் பொருளை வாசித்தார்.
தொடர்ந்து நடந்த கூட்டத்தில் இதுவரை நடந்து முடிந்த பணிகள், நடக்க உள்ள பணிகள் மற்றும் செலவினங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இளநிலை உதவியாளர் முருகன் நன்றி கூறினார்.