ADDED : செப் 17, 2026 07:32 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: ஏனாம், கிரியம்பேட்டா காமராஜர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் மற்றும் ரெயின்கோட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமை தாங்கி, 73- மாணவர்களுக்கு இலவச சைக்கிள் மற்றும் ரெயின் கோட்டுகளை வழங்கினார்.
பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கேன்டீனை திறந்து வைத்தார். அவர், பேசுகையில், ‘வரும் நவம்பர் 14-ம் தேதிக்குள் அனைத்து வகுப்பறைகளும் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்படும்’ என்றார்.
பள்ளி துணை முதல்வர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
