/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சைக்கிள் ஓட்டுவது சிறந்த உடற்பயிற்சி திரைப்பட விழாவில் முதல்வர் பேச்சு
/
சைக்கிள் ஓட்டுவது சிறந்த உடற்பயிற்சி திரைப்பட விழாவில் முதல்வர் பேச்சு
சைக்கிள் ஓட்டுவது சிறந்த உடற்பயிற்சி திரைப்பட விழாவில் முதல்வர் பேச்சு
சைக்கிள் ஓட்டுவது சிறந்த உடற்பயிற்சி திரைப்பட விழாவில் முதல்வர் பேச்சு
ADDED : அக் 05, 2024 04:53 AM
புதுச்சேரி :
சைக்கிள் ஓட்டுவது சிறந்த உடற்பயிற்சி என்பதால் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்குவதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரியில் இந்திய திரைப்பட விழா அலையன்ஸ் பிரான்சிஸ் கலை அரங்கில் நேற்று துவங்கியது. விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு சிறந்த பட இயக்குனருக்கு விருது வழங்கி பேசியதாவது:
புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழா நடத்தப்பட்டு, சிறந்த திரைப்படம் இயக்குனர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. திரைப்படங்கள் பொழுதுபோக்கு மட்டுமின்றி சமூக அக்கறை கருத்துகள் உள்ளதாக இருக்க வேண்டும். மக்கள் மனதில் இடம் பிடித்த திரைப்பட நடிகர்கள் பெரிய தலைவர்களாக வந்துள்ளனர்.
திரைப்படங்கள் வணிக ரீதியாக எடுக்கப்படுகிறது. ஆனால் ஒரு சில திரைப்படங்கள் மனித வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களை சொல்லும் படமாக உள்ளது. சாதாரண திரைப்படங்கள் விருது வாங்கும் படமாக இருக்கும். குரங்கு பெடல் இயக்குனர் சிறந்த கதையை இயக்கி அனைவரும் பாராட்டு வகையில் திரைப்படத்தை எடுத்துள்ளார்.
சிறிய வயதில் 'குரங்கு பெடல்' (அரைபெடல்) போடாமல் யாரும் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள முடியாது. இந்த அனுபவம் எனக்கும் உள்ளது. நானே பள்ளியில் படிக்கும்போது ஆசிரியரின் சைக்கிளை துடைப்பதாக கூறிக்கொண்டு சைக்கிள் எடுத்துக்கொண்டு ஓட்ட கற்றுக்கொண்டேன். சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் அடிப்பது மிக சிறந்த உடற்பயிற்சி. அதனால் தான் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் அரசு வழங்கி வருகிறது.