தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/போக்குவரத்து துறையில் 'பேன்சி' எண்களுக்கு ஏலம்

போக்குவரத்து துறையில் 'பேன்சி' எண்களுக்கு ஏலம்

போக்குவரத்து துறையில் 'பேன்சி' எண்களுக்கு ஏலம்


ADDED : ஜன 10, 2024 01:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2024 01:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி போக்குவரத்துத்துறையின் பி.ஒய் 02 டபள்யூ (காரைக்கால்) வரிசையில் உள்ள பேன்சி எண்களுக்கான ஏலம் வரும் 19ம் தேதி நடக்கிறது.

போக்குவரத்து ஆணையர் அலுவலக செய்திக்குறிப்பு:

புதுச்சேரி போக்குவரத்து துறையின் பி.ஒய் 02 டபள்யூ (காரைக்கால்) வரிசையில் உள்ள 'பேன்சி' எண்களை https://parivahan.gov.in/fancy என்ற இணைய தளத்தில் ஏலம் விட இருக்கிறது.

இந்த ஏலத்தில் பங்கு பெறுவதற்கு தேவையான பெயர் (user name) மற்றும் கடவு சொல்லை(password) https://parivahan.gov.in/fancy என்ற இணையதளத்தில் 'New public user' கிளிக் செய்வதன் மூலம் நாளை 11ம் தேதி முதல் 18 ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்தவர்கள் மட்டுமே 19ம் தேதி காலை 11:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை ஏலத்தில் பங்கு பெறலாம்.

இந்த E-Auction முறையில் பங்கு பெற விரும்பும் பொதுமக்கள் அதற்கான வழிமுறைகள் மற்றும் ஏல நிபந்தனைகளை நாளை 11ம் தேதி முதல் https://transport.py.gov.in என்ற இணையதள முகவரியில் பார்த்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத் தொகையின் விவரம், E.M.D யின் விவரம், ஏல நிபந்தனைகள் குறித்த விவரங்கள் மற்றும் இது சம்பந்தமான இதர விவரங்களை போக்குவரத்துத்துறை அலுவலகத்தின் 0413 2280170 தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். ஏலம் சம்பந்தப்பட்ட பண பரிவர்த்தனை அனைத்தும் 'ஆன்லைன் பேமண்ட்' மூலம் இணைய தளம் வாயிலாக மட்டும் பெறப்படும். நேரிலோ மற்றும் காசோலையாகவோ ஏற்றுக் கொள்ளப்படமாட்டது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us