/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெரிய மார்க்கெட் வியாபாரிகள் சங்க ஒருங்கிணைந்த பேரவை கூட்டம்
/
பெரிய மார்க்கெட் வியாபாரிகள் சங்க ஒருங்கிணைந்த பேரவை கூட்டம்
பெரிய மார்க்கெட் வியாபாரிகள் சங்க ஒருங்கிணைந்த பேரவை கூட்டம்
பெரிய மார்க்கெட் வியாபாரிகள் சங்க ஒருங்கிணைந்த பேரவை கூட்டம்
ADDED : நவ 27, 2025 04:36 AM

புதுச்சேரி: பு துச்சேரி பெரிய மார்க்கெட்டில் குபேர் அங்காடி, அடிகாசு சங்கம், பூக்கடை, மீன் வியாபாரிகள் சங்கங்களின் ஒருங்கிணைந்த பேரவை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, சுப்ரமணி, தயாளன் தலைமை தாங்கினர். சேதுசெல்வம், பாலா முன்னிலை வகித்தனர்.
இதில், மறைந்த மார்க்கெட் சங்க முன்னாள் தலைவர் ராமனுக்கு நேரு எம்.எல்.ஏ., அஞ்சலி செலுத்தினார்.
கூட்டத்தில், மார்க்கெட் வியாபாரிகள் சங்கங்களின் கவுரவ தலைவராக சுப்ரமணி, செயல் தலைவராக சேதுசெல்வம், தலைவராக தயாளன், செயலாளர்களாக செல்வகுமார், பாலா, பொருளாளராக சசி, உள்ளிட்ட துணைத் தலைவர்கள், துணை செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில், பெரிய மார்க்கெட், குபேர் அங்காடியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
கடை வைத்துள்ளவர்களுக்கு அவர்களின் பெயரிலேயே உரிமம் வழங்க வேண்டும். அடிக்காசு வாடகையை, மாத வாடகையாக மாற்றி கொடுக்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.