ADDED : ஜூன் 29, 2026 03:10 AM

அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்கால் மாங்கனி திருவிழாவில் நேற்று இரவு பிக் ஷாடணமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.
காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழா நேற்று முன்தினம் மாப்பிள்ளை அழைப்புடன் துவங்கியது. நேற்று காலை முக்கிய நிகழ்வாக பரமதத்தர் - காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபம் நடந்தது.
இரவு 7:00 மணிக்கு கைலாசநாதர் கோவிலில். மேள தாளங்கள் முழங்க பிக் ஷாடணமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
