ADDED : ஏப் 06, 2025 07:24 AM
பாகூர் : பைக்குகள் மோதிய விபத்தில் சமையலர் உயிரிழந்தார்.
வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் பாலபாஸ்கரன் 36; சமையல் கலைஞர்.
இவர் நேற்று சமையல் வேலைக்கு சென்று விட்டு காலை 9:00 மணியளவில் தனது பைக்கில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
புதுச்சேரி - கடலுார் சாலை, கிருமாம்பாக்கம் சாய்பாபா கோவில் அருகே சென்ற போது, வலது பக்கமாக சாலையை கடக்க முயன்றார். அப்போது, கடலுார் நோக்கி சென்ற மற்றொரு பைக் அவர் மீது மோதியது.
படுகாயமடைந்த பாலபாஸ்கரனை, பொது மக்கள் உதவியுடன் போக்குவரத்து போலீசார் மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர், இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார்.
விபத்த குறித்து கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.