ADDED : ஜூலை 04, 2025 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்காலில் இருபைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் இறந்தார்.
காரைக்கால், திருநள்ளாறு, சேத்துார், பண்டாரவடை மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ், 54. இவர் அரசு நுாற்பாலையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் தனது பைக்கில் வேலைக்கு சென்றபோது எதிரே வந்த பைக் ஒன்று நேருக்கு நேர் மோதியது.
இதில், ஆனந்தராஜ் மற்றும் மற்றொரு பைக்கில் வந்த நாகப்பட்டினம், ஏனங்குடி, ஆதலையூர், வடக்கு தெருவை சேர்ந்த அப்துல் மஜீத் மகன் சமீர், 29, ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இருவரும் அரசு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சமீர் இறந்தார். விபத்து குறித்து திருப்பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.