UPDATED : நவ 23, 2026 06:02 PM
ADDED : நவ 23, 2026 06:02 PM
அ நிறம் | அளவு
பாகூர்: அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் வெள்ளியம்மாள் 75; இவர் கடந்த 17ம் தேதி மதியம், முதியோர் உதவி தொகை எடுப்பதற்காக வீட்டில் இருந்து அரியாங்குப்பம் இந்தியன் வங்கிக்கு புறப்பட்டு சென்றார். அரியாங்குப்பம் புதிய பாலம் அருகே சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, புதுச்சேரி நோக்கி சென்ற பைக், வெள்ளியம்மாள் மீது மோதியது. இதில் அவருக்கு இடகாலில் எலும்பு முறிவு ஏற்பட்ட அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.
மூதாட்டியின் மகன் விநாயகமூர்த்தி புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
