தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பைக் விபத்தில் தொழிலாளி பலி 

பைக் விபத்தில் தொழிலாளி பலி 

பைக் விபத்தில் தொழிலாளி பலி 


ADDED : ஆக 19, 2026 06:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2026 06:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பாலத்தின் தடுப்புச்சுவரில் பைக் மோதி, கட்டட தொழிலாளி இறந்தார்.

வில்லியனுார் அடுத்த பிள்ளையார்குப்பம், சிவகாமி நகர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுகுமாரன், 29; கட்டட தொழிலாளி. இவருக்கு, கீர்த்தனா என்ற மனைவியும், இரண்டு மகன்கள் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு தனது பல்சர் பைக்கில் (பி.ஓய் 01 சி.எப். 8328) ராமநாதபுரத்தில் இருந்து பிள்ளையார்குப்பம் நோக்கி வந்து கொண்டிருந்தார். பிள்ளையார்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள பாலத்தின் தடுப்புச்சுவர் மீது பைக் மோதியதில், சுகுமாறன் தலையில் படுகாயமடைந்தார்.

அவரை, ஊசுடு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, சிகிச்சை பலனின்றி இரவு 10:30 மணிக்கு இறந்தார்.விபத்து குறித்து வில்லியனுார் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us