நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வீட்டு எதிரில் நிறுத்திய பைக் மாயம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேதாரப்பட்டு முத்தமிழ் நகர் இ.வி.ஆர். தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் 30, தனியார் கம்பெனி நடத்தி வருகிறார்.
இவர் கடந்த 3ம் தேதி தனக்கு சொந்தமான பைக்கை இரவு 11 மணிக்கு வீட்டின் எதிரில் நிறுத்தி விட்டு துாங்க சென்றார்.
பின் காலையில் எழுந்து வந்து பார்த்த போது அவரது பைக்கை காணவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து விக்னேஷ் சேதாரப்பட்டு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

