தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 3 இடங்களில் பைக் திருட்டு

 3 இடங்களில் பைக் திருட்டு

 3 இடங்களில் பைக் திருட்டு


ADDED : ஜன 02, 2026 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2026 04:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மூன்று இடங்களில் பைக்குகளை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வானுார் அடுத்த பட்டானுாரை சேர்ந்தவர் வேல்முருகன்,52. இவர், கடந்த 10ம் தேதி ஜிப்மர் எதிரில் பைக்கை நிறுத்திவிட்டு ஓட்டலுக்கு சென்றார். பின், திரும்பி வந்தபோது பைக்கை காணவில்லை.

மூலக்குளம் ஜே.ஜே., நகரை சேர்ந்தவர் மணிகண்டன்,29. இவர், புதுச்சேரி ராஜா சிங் வீதியில் உள்ள தனியார் விடுதியில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த நவம்பர் 15ம் தேதி விடுதி முன் தனது பைக்கை நிறுத்திருந்தார். மறுநாள் காலையில் பைக்கை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

விழுப்புரம் மாவட்டம், கலிஞ்சிகுப்பத்தை சேர்ந்தவர் அவிந்தன், 27; தமிழக போலீஸ்காரரான இவர், கடந்த 16ம் தேதி, கடலுார் சாலையில் பைக்கை நிறுத்தவிட்டு, மாலுக்கு சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதுகுறித்த புகார்களின்பேரில் டி.நகர், ஒதியஞ்சாலை மற்றும் உருளையன்பேட்டைபோலீசார் தனித்தனியே வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us