நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பைக் திருடிச் சென்றவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கரிக்கலாம்பாக்கம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன்; கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு நண்பரது பைக்கை (பி.ஒய்.01.சி.சி.9039) தனது வீட்டு எதிரில் நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றார். சிறிது நேரத்திற்கு பிறகு, திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

