ADDED : ஜூன் 25, 2025 03:10 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி : பைக்கை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மூலக்குளத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன், 46; டிரைவர். இவர் கடந்த 14ம் தேதி தனது பைக்கை வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலையில் பார்க்கும் போது, பைக் காணாமல் அதிர்ச்சியடைந்தார். பைக்கை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில்,ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, பைக் திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
