நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் பைக் திருடு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேங்காய்திட்டு பள்ளிக்கூட வீதியை சேர்ந்தவர் ராஜசேகரன் 61; ஒய்வு பெற்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்.
தற்போது, இவர் புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள தனியார் நகை கடையில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
கடந்த 8 ம் தேதி காலை வேலைக்கு சென்ற இவர் தனது யமகா பைக்கை, காமராஜர் சாலையில் நிறுத்தி விட்டு சென்றார்.
பணி முடிந்து மாலை திரும்பி வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை.
புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.