நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வீட்டு எதிரில் நிறுத்திய பைக் மாயம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
லாஸ்பேட்டை, டோபிகானா முதல் தெருவைச் சேர்ந்தவர் கணபதி, 31; இவர் தனியார் உணவு டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 10ம் தேதி மாலை பைக்கை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு உள்ளே சென்றார்.
பின் வந்து பார்த்தபோது பைக் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.