நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பைக் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முதலியார்பேட்டை, அவ்வை நகரை சேர்ந்தவர் பிரதாப் சிங், 42; டிரைவர்.
இவர், கடந்த 12ம் தேதி இரவு தனது வீட்டின் வெளியே பைக்கை நிறுத்தி பூட்டி சென்றார். மறுநாள் காலை பார்த்தபோது பைக்கை காண வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.
புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

