ADDED : செப் 04, 2026 09:15 AM
அ நிறம் | அளவு
பாகூர்: விழுப்புரம், திருநகர் பகுதியை சேர்ந்தவர் நரேஷ்குமார், 24. இவர், கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார்.
தற்போது, காட்டுக்குப்பம் மெயின் ரோட்டில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த மாதம் 14ம் தேதி இரவு பணி முடித்து வீட்டிற்கு வந்த நரேஷ்குமார், தனது யமாகா ஆர்.ஒன் 5 பைக்கை, வாசலில் நிறுத்தி விட்டு துாங்கி சென்றார். மறுநாள் காலை பார்த்த போது, பைக்கை காணவில்லை. கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
