/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலையில் விளம்பர தட்டிகள்: நடவடிக்கை தேவை
/
சாலையில் விளம்பர தட்டிகள்: நடவடிக்கை தேவை
ADDED : நவ 13, 2024 05:41 AM

அரியாங்குப்பம் : கடலுார் சாலையில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள், விளம்பர தட்டிகள் வைத்தவர்கள் மீது, வழக்கு பதிந்து அபராதம் விதிக்க வேண்டும்.
தவளக்குப்பத்தில் நேற்று முன்தினம் சபாநாயகர் பிறந்த நாள் விழா, கொண்டாடப்பட்டது.
அவரது ஆதரவாளர்கள், கடலுார் சாலையில், தவளக்குப்பத்தில் இருந்து, இடையார்பாளையம் வரை, சாலையில் இரு புறத்திலும், பேனர்கள் வைத்துள்ளனர். அதனால், வாகனத்தில் செல்பவர்கள் கவன சிதறல் ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
புதுச்சேரியில் சாலையில் பேனர்கள் வைப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில், விளம்ப தட்டி, பேனர்கள் வைக்கப்படுவர்கள் மீது, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள், பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

