தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிறுமிக்கு பாலியல் தொல்லை; பைண்டருக்கு 5 ஆண்டு சிறை

 சிறுமிக்கு பாலியல் தொல்லை; பைண்டருக்கு 5 ஆண்டு சிறை

 சிறுமிக்கு பாலியல் தொல்லை; பைண்டருக்கு 5 ஆண்டு சிறை


ADDED : மார் 26, 2026 08:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 08:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பைண்டருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து, புதுச்சேரி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுச்சேரி, முத்திரையர்பாளையத்தை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (எ) அனந்தராஜ், 66; பைண்டர். இவர் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 5 வயது சிறுமியை, கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் அந்தோணிராஜ் மீது வழக்குப் பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு சிறப்பு வழக்கறிஞராக பச்சையப்பன் ஆஜரானார்.

வழக்கு விசாரணை முடிந்து, நீதிபதி சுமதி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றவாளி அந்தோணிராஜிக்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக அரசு ரூ. 2 லட்சம் வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us