தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பறவைக் காய்ச்சல் எதிரொலி :புதுச்சேரி ஏரிகளில் தீவிர கண்காணிப்பு

 பறவைக் காய்ச்சல் எதிரொலி :புதுச்சேரி ஏரிகளில் தீவிர கண்காணிப்பு

 பறவைக் காய்ச்சல் எதிரொலி :புதுச்சேரி ஏரிகளில் தீவிர கண்காணிப்பு


ADDED : பிப் 10, 2026 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 05:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தமிழகத்தில் பறவை காய்ச்சல் எதிரொலியாக புதுச்சேரி ஊசுட்டேரி படகு குழாமில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து கால்நடை துறை மற்றும் வனத்துறை இணை இயக்குனர் குமரன் ஊழியர்களுக்கு விளக்கினார்.

புதுச்சேரியில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள கோழிப்பண்ணைகள், ஊசுட்டேரி, பாகூர், வேல்ராம்பட்டு ஆகிய ஏரிகளுக்கு வரும் பறவைகளால் பறவை காய்ச்சல் தொற்று ஏற்படாமல் இருக்க புதுச்சேரி கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் வனத்துறை சார்பில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதில் நேற்று, ஊசுட்டேரியில் இயங்கும் படகு குழாமில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் கால்நடை மற்றும் வனத்துறை இணை இயக்குனர் குமரன் பேசுகையில், சுற்றுலாப் பயணிகள் பறவைகள் அருகில் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது மட்டுமின்றி வலசை வரும் வெளிநாட்டு பறவைகள் அதிகாலையில் 5ல், இருந்து 6 மணி வரை மற்றும் மாலையில் 5:30ல் இருந்து 7 மணி வரை வான் பரப்பில் பறந்து செல்லும் இந்த நேரங்களில் குழந்தைகளின் துணிகளை கொடிகளில் காய வைக்கும்போது, பறவைகள் எச்சம் படும் வாய்ப்புள்ளது. நரிக்குறவர்கள் விற்கும் தடைசெய்யப்பட்ட நாரை, கொக்கு உள்ளிட்ட பறவைகளின் இறைச்சியை வாங்கி உண்ணாமல் இருப்பது நல்லது.இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us