ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை ஆதரித்து பா.ஜ., அண்ணாலை பிரசாரம்
ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை ஆதரித்து பா.ஜ., அண்ணாலை பிரசாரம்
ADDED : மார் 31, 2026 10:54 PM

புதுச்சேரி: தமிழ்நாடு பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை ஆதரித்து காமராஜ் நகர் தொகுதியில் பிரசாரம் செய்தார்.
புதுச்சேரி சாரம் துவங்கி வெங்கடேஸ்வரா நகர், ரெயின்போ நகர், கருவாடிக்குப்பம் சிவாஜி சிலை வரை ரோடு ஷோ நடந்தது.
இதில், ல.ஜ.க., வேட்பாளர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு 'தர்பூசணி' சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.
அவர், பேசியதாவது:
'இளம் மற்றும் செயற்பாட்டு திறன் கொண்ட ஜோஸ் சார்லஸ் மார்டின் போன்றவர் காமராஜ் நகர் தொகுதிக்கு முன்னேற்றத்தை கொண்டு வருவார். மக்கள் மாற்றத்தை விரும்பினால், தர்பூசணி சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
காமராஜ் நகர் ஒரு முக்கிய அரசியல் மையமாக மாறியுள்ளது. மக்களை நம்பி ஜோஸ் சார்லஸ் மார்டின் அரசியலுக்கு வந்துள்ளார். மாற்றத்தை உருவாக்க அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
ஜோஸ் சார்லஸ் மார்டின் பேசுகையில், 'நான் அரசியலுக்கு வருவதற்கு முக்கிய காரணம் அண்ணாமலை தான். எனக்கு ஐ.பி.எஸ்., ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் மக்கள் சேவைக்காக அரசியலுக்கு வந்துள்ளேன். கூட்டணி கட்சிகள் அனைத்தும் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைக்க வேண்டும்' என்றார்.
