/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 23 தொகுதிகளுக்கு பா.ஜ.,வில் தலைவர்கள் நியமனம்
/
புதுச்சேரியில் 23 தொகுதிகளுக்கு பா.ஜ.,வில் தலைவர்கள் நியமனம்
புதுச்சேரியில் 23 தொகுதிகளுக்கு பா.ஜ.,வில் தலைவர்கள் நியமனம்
புதுச்சேரியில் 23 தொகுதிகளுக்கு பா.ஜ.,வில் தலைவர்கள் நியமனம்
ADDED : ஜன 09, 2025 06:24 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் 23 தொகுதிகளுக்கு, பா.ஜ., தொகுதி தலைவர் தேர்ந்தெடுக்கும் ஆலோசனை கூட்டம் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.
பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., தலைமை தாங்கினார். அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பா.ஜ., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு புதுச்சேரி பா.ஜ., மாநில தேர்தல் அதிகாரி அகிலன், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளில் 23 தொகுதிகளுக்கு, தொகுதி தலைவர் பெயர்களை வெளியிட்டார்.
அதன்படி, மண்ணாடிப்பட்டு-அனுசுவை, திருபுவனை-அம்பிரிஷ், ஊசுடு-முரளி, மங்கலம்-சபரிகிரிசன், வில்லியனுார்-சுந்தர், உழவர்கரை-கோவிந்தராஜ், கதிர்காமம்-தினேஷ், இந்திரா நகர்-அருள்ஜோதி, தட்டாஞ்சாவடி-கவிதா, காமராஜர் நகர்-கோகுலகண்ணன், காலப்பட்டு-அசோக்குமார், முத்தியால்பேட்-திருவேங்கடம், ராஜ்பவன்-முருகன், உப்பளம்-ஜெய பிரியதர்ஷினி, உருளையான்பேட்-சக்திவேல், முதலியார்பேட்-புவனேஸ்வரி, அரியாங்குப்பம்-வசந்தராஜா, மணவெளி-பிரகாஷ் (எ) லட்சுமிகந்தன், நெட்டப்பாக்கம்-சக்திவேல், பாகூர்-விநாயகபாபு, மாகே-பிரபிஷ்குமார், ஏனம்-கனகல வெங்கடசாமி ஆகியோர் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

