ADDED : ஜூலை 05, 2026 03:02 AM
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்.,- பா.ஜ.,தலைமையிலான தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சி அமைத்துள்ளது. அதில், முதல்வராக ரங்கசாமி, அமைச்சர்களாக பா.ஜ.,வை சேர்ந்த நமச்சிவாயம், ராஜசேகர், என்.ஆர்.காங்., கட்சியை சேர்ந்த ராஜவேலு, மல்லாடி கிருஷ்ணராவ், சிவக்கொழுந்து உள்ளனர். ஆனால், அமைச்சர்களுக்கு இதுவரை இலாகா ஒதுக்கீடு செய்யவில்லை. இந்நிலையில், சபாநாயகர் பதவி மற்றும் அமைச்சர்களுக்கு 'பவர் புல்' இலகா ஒதுக்கீடு விவகாரத்தில் மோதல் நீறு பூத்த நெருப்பாக இருந்து வருகிறது.
இதன் காரணமாக, கடந்த 2ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைத்த 125 நாள் வேலை திட்டமான வளர்ச்சியடைந்த இந்தியா- வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத திட்டம் துவக்க விழா வில்லியனுாரில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் நடந்த இந்த விழாவில் முதல்வர், அமைச்சர்கள், எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் பங்கேற்பர் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், விழாவில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் என்.ஆர்.காங்., கட்சியை சேர்ந்த ராஜவேலு, மல்லாடி கிருஷ்ணாராவ், சிவக்கொழுந்து, அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., ரவிக்கமார், த.வெ.க., எம்.எல்.ஏ., சாய் சரவணன்குமார் ஆகியோர் மட்டுமே பங்கேற்றனர். பா.ஜ., மற்றும் காங்., மக்கள் பிரதிநிதிகள் எவரும் ப ங்கேற்கவில்லை.
மத்திய அரசு விழாவை, பா.ஜ.,வை சேர்ந்த அமைச்சர்கள் நமச்சிவாயம், ராஜசேகர், எம்.பி., செல்வகணபதி, எம்.எல்.ஏ., ஜான்குமார், மீனாட்சி சுந்தரம் மற்றும் புறக்கணித்திருப்பது, தே.ஜ., கூட்டணியில் நிலவி வரும் பனிப்போர் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
