ADDED : ஏப் 05, 2026 06:37 AM

புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதி பா.ஜ., வேட்பாளர் ராமலிங்கம், நேற்று குமரகுருபள்ளத்தில் ஓட்டு சேகரித்தார்.
ராஜ்பவன் தொகுதி பா.ஜ., வேட்பாளர் ராமலிங்கம் நேற்று மாலை குமரகுருபள்ளத்தில் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். அப்பகுதி மக்கள் அவருக்கு மாலை அணிவித்து, வரவேற்றனர்.
அப்போது, வேட்பாளர் குமரகுரு பள்ளத்தில், பா.ஜ., - என்.ஆர்.,காங்., ஆட்சியில், புதுச்சேரியில் மிக உயரமாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மத்தியில் எந்த ஆட்சி இருக்கிறதோ, அதே கூட்டணி ஆட்சி புதுச்சேரியில் இ ருந்தால் தான், மக்களுக்கு அனைத்து நலத்திட்டங்கள் கிடைக்கும். நீங்கள் போடும் ஓட்டு, வாழ்கைக்கு பயன் உள்ளதாகவும், பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும்.
தேர்தலில் என்னை வெற்றி பெறச் செய்தால், இப்பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன் என வாக்குறுதி அளித்து ஓட்டு சேகரித்தார்.
