மண்ணாடிப்பட்டு பா.ஜ., வேட்பாளர் மத்திய அமைச்சருடன் ஓட்டு சேகரிப்பு
மண்ணாடிப்பட்டு பா.ஜ., வேட்பாளர் மத்திய அமைச்சருடன் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 05, 2026 06:48 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் நேற்று மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வாலுடன் திருக்கனுார் கடை வீதியில் ஓட்டு சேகரித்தார்.
வேட்பாளர் நமச்சிவாயம் கூறுகையில், 'இக்கிராமத்தில் நீண்ட கால கோரிக்கையான அரசு பள்ளி கட்டடம் முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன் பெயரில் ரூ. 7 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. திருக்கனுாரில் கடந்த 12 ஆண்டாக நடைபெறாமல் இருந்து முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தி உள்ளேன்.
நாராயணசாமி நகர், சரஸ்வதி நகர், வணிகர் வீதிகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுபோன்று கிடப்பில் உள்ள அனைத்து மக்கள் நலத்திட்ட பணிகளையும் விரைந்து நிறைவேற்ற, தன்னை தாமரை சின்னத்தில் ஓட்டு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
