தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பா.ஜ., வேட்பாளர் ஜான்குமார் வேல்ராம்பட்டில் ஓட்டு சேகரிப்பு 

பா.ஜ., வேட்பாளர் ஜான்குமார் வேல்ராம்பட்டில் ஓட்டு சேகரிப்பு 

பா.ஜ., வேட்பாளர் ஜான்குமார் வேல்ராம்பட்டில் ஓட்டு சேகரிப்பு 


ADDED : மார் 31, 2026 07:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 07:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் ஜான்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கருடன் வேல்ராம்பட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.

புதுச்சேரி, சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் முதலியார்பேட்டை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் ஜான்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கருடன் இணைந்து வேல்ராம்பட்டு, நேத்தா நகர், திருமகள் நகர் பகுதிகளில் வீடு, வீடாக சென்று தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அப்போது அவர்களை பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் வரவேற்றனர்.

ஓட்டு சேகரிப்பின் போது, இப்பகுதியில் சாலை, கழிவுநீர் வாய்க்கால், சுத்தமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் மேம்படுத்த படவில்லை என, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, வேட்பாளர் ஜான்குமார், தொகுதியில் வெற்றி பெற்றவுடன் அடிப்படை வசதிகளை விரைந்து மேம்படுத்தவும், அரசின் மக்கள் நலத்திட்டங்களை உடனுக்குடன் கொண்டுவரவும் நடவடிக்கை எடுப்பேன் என, உறுதியளித்தார்.

இதில், பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us