பா.ஜ., வேட்பாளர் கல்யாணசுந்தரம் தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு
பா.ஜ., வேட்பாளர் கல்யாணசுந்தரம் தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 03, 2026 08:23 PM

புதுச்சேரி: காலாப்பட்டு தொகுதி பா.ஜ., வேட்பாளர் கல்யாணசுந்தரம் நேற்று கூட்டணி கட்சியினருடன் கருவடிக்குப்பம் பாரதி நகர் பகுதியில் தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
வேட்பாளர் கல்யாண சுந்தரம் பேசுகையில், இப்பகுதியில் அனைத்து சாலைகளும் கடந்த 5 ஆண்டுகளில் தரமான சாலைகளாக மாற்றப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தன்னை மீண்டும் வெற்றி பெற செய்தால், விமான நிலைய விரிவாக்கத்தில் கருவடிக்குப்பம் பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.
கருவடிக்குப்பத்தில் சர்வதேச விளையாட்டு அரங்கம் அமைத்து, 2,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். 56 கோடி மதிப்பில் வெள்ளவாரி ஓடை துார்வாரபட்டு இருபுறமும் மதில் சுவர் அமைக்கப்படும். அங்கு, 1,000 பேருக்கு இலவச பட்டா வழங்கப்படும். அனைத்து வீட்டிற்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்' என்றார்.
