பா.ஜ., வேட்பாளர் கல்யாணசுந்தரம் கனகசெட்டிகுளத்தில் ஓட்டு சேகரிப்பு
பா.ஜ., வேட்பாளர் கல்யாணசுந்தரம் கனகசெட்டிகுளத்தில் ஓட்டு சேகரிப்பு
ADDED : மார் 28, 2026 11:11 PM

புதுச்சேரி: காலாப்பட்டு தொகுதி பா.ஜ., வேட்பாளர் கல்யாணசுந்தரம் கனக செட்டிகுளத்தில், ஓட்டு சேகரித்தார்.
காலாப்பட்டு தொகுதி பா.ஜ., வேட்பாளர் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து வருகிறார். காலாப்பட்டு தொகுதியான கனக செட்டிகுளம் பகுதியில் நேற்று மாலை வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் தீவிரமாக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், அவருக்கு மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அவர், எம்.எல்.ஏ.,வாக இருந்த 5 ஆண்டுகளில் கனக செட்டிகுளம் பகுதியில், செய்த திட்ட பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் செய்ததை பொதுமக்களிடம் எடுத்து கூறினார். வரும் தேர்தலில், வெற்றிப்பெற்று மீண்டும் எம்.எல்.ஏ.,வாக வந்தால், கனக செட்டிகுளம் பகுதியில் அனைத்து சாலைகளும் சிமென்ட் சாலையாக மேம்படுத்தப்படும்.
அப்பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் வசதிகள், இரண்டு அடுக்கு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, அனைத்து வீடுகளிலும் புதிய குடிநீர் பைப் லைன் அமைத்து கொடுப்பேன் என, மக்களிடம் வாக்குறுதி அளித்து கல்யாணசுந்தரம் ஓட்டு சேகரித்தார். அப்போது, என்.ஆர்.காங்., பா.ஜ., மற்றும் கூட்டணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
