பா.ஜ., வேட்பாளர் கல்யாணசுந்தரம் மத்திய அமைச்சருடன் ஓட்டு சேகரிப்பு
பா.ஜ., வேட்பாளர் கல்யாணசுந்தரம் மத்திய அமைச்சருடன் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 04, 2026 09:58 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: காலாப்பட்டு தொகுதி பா.ஜ., வேட்பாளர் கல்யாணசுந்தரம், மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் மற்றும் கூட்டணி கட்சியினருடன் பெரிய காலாப்பட்டு பாலமுருகன் கோவில் பூஜை செய்து, வீடு, வீடாக சென்று தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது, வேட்பாளர் கல்யாணசுந்தரம் கூறுகையில், 'அப்பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் கடந்த 5 ஆண்டுகளில் மேம்படுத்தப்பட்டுள்ளது. தன்னை மீண்டும் வெற்றி பெறச் செய்தால் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். விடுபட்ட அனைத்து மக்கள் நலத்திட்ட பணிகளும் விரைந்து செயல்படுத்தப்படும். வீடு இல்லாதவர்களுக்கு இலவச மனை பட்டா வழங்கப்படும் என, உறுதியளித்தார்.
ஓட்டு சேகரிப்பின்போது, தே.ஜ., கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
