பா.ஜ., வேட்பாளர் கல்யாணசுந்தரம் பிள்ளைசாவடியில் ஓட்டு வேட்டை
பா.ஜ., வேட்பாளர் கல்யாணசுந்தரம் பிள்ளைசாவடியில் ஓட்டு வேட்டை
ADDED : ஏப் 03, 2026 05:23 AM

புதுச்சேரி: காலாப்பட்டு தொகுதி பா.ஜ., வேட்பாளர் கல்யாணசுந்தரம் நேற்று நாவற்குளம், பிள்ளைசாவடியில் வீடு, வீடாக சென்று தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
அவர், இப்பகுதியில் உள்ள சாலைகளில் 95 சதவீதம் தரமான சிமென்ட் மற்றும் தார் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் தங்கள் பிரச்னைகளை தெரிவிக்க நாவற்குளம் என்ற வாட்ஸ் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
அதில், தங்களது குறைகளை தெரிவித்தால், உடனுக்குடன் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் இப்பகுதி முழுதும் கண்காணிப்பு கேமரா, விடுபட்ட சாலைகள் அமைக்கப்படும். நீர்த்தேக்க தொட்டிகளிலேயே சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தி, அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும் என, வாக்குறுதி அளித்து தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
பின், பிள்ளைச்சாவடி திரவுபதியம்மன் கோவிலில் தரிசனம் செய்தவிட்டு, திருக்குளம் தெரு, பிள்ளையார் கோவில் வீதி, வாத்தியார் வீதி, நெருப்புக்குழி, தேர் ஓடும் வீதி பகுதிகளில் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.
