தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் சோம்பட்டில் ஓட்டு சேகரிப்பு

 பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் சோம்பட்டில் ஓட்டு சேகரிப்பு

 பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் சோம்பட்டில் ஓட்டு சேகரிப்பு


ADDED : ஏப் 03, 2026 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 05:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் நேற்று சோம்பட்டு கிராமத்தில் கூட்டணி கட்சியினருடன் வீடு, வீடாக சென்று கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளாக செய்த மக்கள் நலத்திட்ட சாதனைகளை பட்டியலிட்டு 'தாமரை' சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.

ஓட்டு கேட்டு சென்ற வேட்பாளரை, அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

தொடர்ந்து அவர், நிலத்தில் வேர்க்கடலை அறுவடை செய்து கொண்டிருந்த பெண்களிடம் ஓட்டு சேகரித்தார்.

அப்போது, வேட்பாளர் நமச்சிவாயம் கூறுகையில்,'சோம்பட்டு கிராம நீர்தேக்க தொட்டி அருகே ரூ.15.50 லட்சம் மதிப்பில் சாலை, வடிகால் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. ரங்கசாமி நகரில் ரூ. 7.30 லட்சத்தில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சோம்பட்டு காலனியில் ரூ. 22.50 லட்சம் செலவில் சாலை மற்றும் வடிகால்கள் அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கிராமத்தில் கிடப்பில் உள்ள அனைத்து அடிப்படை வசதிகளை விரைந்து மேம்படுத்தி, அரசின் மக்கள் நலத்திட்ட பணிகளை உடனுக்கு உடன் செயல்படுத்துவேன்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us