பா.ஜ., வேட்பாளர் ராமலிங்கம வாழைக்குளத்தில் ஓட்டு வேட்டை
பா.ஜ., வேட்பாளர் ராமலிங்கம வாழைக்குளத்தில் ஓட்டு வேட்டை
ADDED : ஏப் 06, 2026 09:21 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: வாழைக்குளத்தில் பா.ஜ., வேட்பாளர் ராமலிங்கம் தீவிர ஓட்டு சேகரித்தார்.
ராஜ்பவன் தொகுதி பா.ஜ., வேட்பாளர் ராமலிங்கம் நேற்று வாழைக்குளம், சின்னையபுரத்தில் ஓட்டு சேகரித்தார். அப்போது, வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை வாக்காளர்களுக்கு வழங்கியும், , கடந்த 5 ஆண்டுகளில் தே.ஜ., கூட்டணி அரசின் நலத்திட்டங்கள் மற்றும் பா.ஜ., வின் தேர்தல் அறிக்கையை எடுத்துக்கூறி ஓட்டு சேகரித்தார்.
பல இடங்களில் வேட்பாளர் ராமலிங்கத்திற்கு ஆரத்தி எடுத்தும் மாலை அணிவித்தும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் வேட்பாளர் ராமலிங்கத்திற்கு ஆதரவாக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
