பா.ஜ., வேட்பாளர் ராமலிங்கம் ஒயிட்டவுனில் ஓட்டு சேகரிப்பு
பா.ஜ., வேட்பாளர் ராமலிங்கம் ஒயிட்டவுனில் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 04, 2026 06:32 AM

புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதி பா.ஜ., வேட்பாளர் ராமலிங்கம் ஒயிட்டவுன் பகுதியில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் ராஜ்பவன் தொகுதியில் பா.ஜ., சார்பில், அக்கட்சியின் மாநில தலைவர் ராமலிங்கம் போட்டியிடுகிறார். இவர் ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு தனது ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக ராஜ்பவன் தொகுதி ஒயிட்டவுன் பகுதி முழுதும் வீடு வீடாக சென்று தாமரை சின்னத்திற்கு ஒட்டு சேகரித்தார்.
அங்கிருந்த பொதுமக்கள் அவருக்கு மாலை அணிவித்து, ஆர்த்தி எடுத்து வரவேற்றனர்.
அப்போது பா.ஜ., வேட்பாளர் ராமலிங்கம் அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார். ஓட்டு சேகரிப்பின் போது பா.ஜ., - என்.ஆர்.காங்., - அ.தி.மு.க., - ல.ஜ.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
