தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பா.ஜ., வேட்பாளர் ராமலிங்கத்திற்கு ராஜ்பவனில் மக்கள் அமோக வரவேற்பு

 பா.ஜ., வேட்பாளர் ராமலிங்கத்திற்கு ராஜ்பவனில் மக்கள் அமோக வரவேற்பு

 பா.ஜ., வேட்பாளர் ராமலிங்கத்திற்கு ராஜ்பவனில் மக்கள் அமோக வரவேற்பு


ADDED : மார் 28, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 05:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் ராமலிங்கம் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட போது, அவருக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.

ராஜ்பவன் தொகுதியில் பா.ஜ., சார்பில் ராமலிங்கம் போட்டியிடுகிறார். ராஜ்பவன் தொகுதியான வைத்திக்குப்பம், வன்னியர் வீதியில் உள்ள வீடுகளில் நேற்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மத்திய, மாநில அரசு மக்களுக்கு செய்த திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறினார்.

ராஜ்பவன் தொகுதியில், மக்களுக்கு முக்கிய பிரச்னையாக இருக்கும் குடிநீர் பிரச்னைக்கு நடவடிக்கை எடுத்து, தொகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வேன் என, வாக்குறுதி அளித்தார்.

தொகுதியில் அடிப்படை வசதியான சாலை, கழிவுநீர் வாய்க்கால் சீரமைத்து, துாய்மையான பகுதியாக மாற்றி அமைப்படும் என கூறி மக்களிடம் ஒட்டு சேகரித்தார். ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட ராமலிங்கத்திற்கு அப்பகுதி பெண்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.

ஓட்டு சேகரிப்பின் போது, என்.ஆர்.காங்., சார்பில், நிர்வாகிகள் சுந்தரபாலு, நாராயணன், மோகன், பா.ஜ., சார்பில், ராஜ்பவன் தொகுதி ஒருங்கிணைப்பாளர் நாகராஜன், சீனுவாச பெருமாள், சப்தகிரி குழுமம் சார்பில், விஜயஆனந்த் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us