தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அபிேஷகப்பாக்கம் பகுதியில் பா.ஜ., வேட்பாளர் செல்வம் ஓட்டுசேகரிப்பு

 அபிேஷகப்பாக்கம் பகுதியில் பா.ஜ., வேட்பாளர் செல்வம் ஓட்டுசேகரிப்பு

 அபிேஷகப்பாக்கம் பகுதியில் பா.ஜ., வேட்பாளர் செல்வம் ஓட்டுசேகரிப்பு


ADDED : ஏப் 06, 2026 09:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2026 09:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மணவெளி தொகுதி அபிேஷகப்பாக்கம் பகுதியில் பா.ஜ., வேட்பாளர் செல்வம் வீடு, வீடாக சென்று நேற்று தாமரை சின்னத்தில் ஓட்டு சேகரித்தார்.

அப்போது, அவர் கூறுகையில், கடந்த 5 ஆண்டு தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, அபிஷேகப்பாக்கத்தில், வீடு இல்லாதவர்களுக்கு இலவச மனை பட்டா பெற்று தந்தேன்.

அம்பேத்கர் முழு உருவ வெங்கல சிலை அமைக்கப்பட்டது. அபிேஷகப்பாக்கம் முதல் இ.சி.ஆர்., சாலை 90 லட்சம் மதிப்பில் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. சேத்திலால் அரசு உயர்நிலைப்பள்ளியில் 83 லட்சம் ரூபாய் மதிப்பீல், கழிவறை மற்றும் சுற்றுச்சுவர், புதிய குடிநீர் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.

முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை, குடும்ப தலைவிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக 2 ஆயிரத்து 500 வழங்க ஏற்பாடு செய்தேன். ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என தொகுதி மக்களிடம் வாக்குறுதியளித்து, ஓட்டு சேகரித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us